Tuesday, December 24, 2024
HomeLatest Newsகனடாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா..!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

கனடாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா..!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

கனடாவில், ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் அயல் நாடான அமெரிக்காவும் மிகவும் மோசமான நிலைமைகளை எதிர்கொண்டு வருகின்றது.

கனடாவின் ஆல்பர்ட்டா, பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் எரிந்து வருகின்றது.

அதன் மூலம் இது வரையிலும் சுமார் 160 மில்லியன் டன் கார்பன் வெளியிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான சூழலில் அயல் நாடான அமெரிக்காவின் டெட்ராய்ட், சிகாகோ மற்றும் மினியாபோலீஸ் ஆகிய நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது.

அதனால், அங்கு சுமார் 8 கோடி மக்கள் மோசமான காற்றை சுவாசித்து வருவதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக இந்த புகையினை சுவாசிக்கும் பட்சத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்களை தேவையின்றி தமது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், அவ்வாறு வெளியில் செல்ல வேண்டிய தேவை ஏற்படின் என். 95 முக கவசங்களை அணிந்து செல்லுமாறும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recent News