இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரில் வெடிகுண்டுகளை அகற்றுதல் மற்றும் தகவல் தொடர்பு போன்ற துறைகளில் ஆதரவை வழங்குவதை மையமாகக் கொண்டு அமெரிக்கா மேலதிகமாக 300 துருப்புக்களை மத்திய கிழக்கிற்கு அனுப்புகிறது என்று பென்டகன் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
” பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பட்ரிக் ரைடர் கூறுகையில்
துருப்புக்கள் அமெரிக்காவில் இருந்து செல்லும் ஆனால் இஸ்ரேலில் இருக்காது. அவை பிராந்திய தடுப்பு முயற்சிகளை ஆதரிப்பதோடு நமது படை பாதுகாப்பு திறன்களை மேலும் மேம்படுத்தும் நோக்கம் கொண்டவை ” என்று கூறினார்.
இந்த நிலையில் , ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க துருப்புக்களுக்கு எதிராக இந்த மாதத்தில் 27 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.