Tuesday, December 24, 2024
HomeLatest Newsதிருடிய சொத்துக்களை இந்தியாவிடம் கொடுத்த அமெரிக்கா

திருடிய சொத்துக்களை இந்தியாவிடம் கொடுத்த அமெரிக்கா

15 வருடங்கள் நடைபெற்ற விசாரணைகளின் முடிவாக இந்தியாவில் இருந்து சிறு சிறு கும்பல்களால் திருடி எடுத்துச் செல்லப்பட்ட விலைமதிப்பற்ற இந்தியாவின் புராதன சொத்துக்களை மீண்டும் இந்தியாவிடமே கையளித்துள்ளது.

அமெரிக்கா.இந்த சொத்துக்களின் மொத்த பெறுமதி 4 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த திங்கட்க்கிழமை இது தொடர்பாக அறிவித்தலை வெளியிட்டிருந்த மன்ஹாட்டன் மாவட்ட சட்டத்தரணி alvin l bragg குறிப்பிடும் போது, மொத்தமாக 307 திருடப்பட்ட சொத்துக்களை மீண்டும் இந்திய மக்களிடம் கையளிக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இவற்றில் அநேகமானவை சுபாஷ் கபூர் என்பவரிடம் இருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.சுபாஷ் கபூர் இவ்வாறான புராதன பெறுமதி மிக்க பொருட்களை நாடு விட்டு நாடு கடத்துவதற்கு திருடர்களிற்கு உதவி வந்துள்ளார்.இதுவரையில் இவர் Afghanistan, Cambodia, India, Indonesia, Myanmar, Nepal, Pakistan, Sri Lanka, Thailand மற்றும் பல நாடுகளில் இருந்து புராதன பொருட்களைக் கடத்த உதவியுள்ளார் எனவும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.இவற்றில் சில பொருட்கள் 2002ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனிவரும் காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாமல் பாதுகாப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும், விசாரணை செய்த சிறப்பு பிரிவு உறுதியளித்துள்ளது.

Recent News