ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் தலிபான்கள் ஆட்சி நடக்கின்றது. தற்போதைய ஆட்சியில் மிக கடுமையான சட்டங்களை அமல்படுத்தி அதனை பின்பற்றும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஆட்சியாளர்களின் உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் ஆப்கானிஸ்தானை சமூக அரசியல் கொள்கை அங்கீகாரத்தில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விலக்கி வைத்தன. அதன்மீது பொருளாதார கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்தின. இதன் காரணமாக பொருளாதாரம் உள்ளிட்ட நிலைப்பாடுகளில் ஆப்கானிஸ்தான் பின்தங்கியது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில்,
“தற்போதைய நிலையில் ஆப்கானிஸ்தானை ஆளும் சக்தியாக அங்கீகரிக்க முடியாது. இருப்பினும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை பெற ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் தகுந்த வரைமுறைகளை பின்பற்ற வேண்டும்,
திறம்பட்ட ஆட்சிக்கு பெண்கள், குடிமக்களை கொண்டு பொருளாதாரத்தை உயர்ந்த வேண்டும். மேலும் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்” என்றார்.