Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsதைவானுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா அனுமதி..!

தைவானுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா அனுமதி..!

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. தைவானை தங்களின் ஒரு பகுதி எனக் கூறி வரும் சீனா, அடிக்கடி ராணுவம் மூலம் தைவானை அச்சுறுத்தி வருகிறது.

அதேவேளையில் தைவான் அமெரிக்காவுடன் நட்புடன் பழகி வருகிறது.
இந்த நிலையில் தைவானுக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஆயுதங்கள் விற்க ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் , நவீன எஃப்-16 போர் விமானத்தின் உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உள்ளிட்டவற்றை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

Recent News