Thursday, January 23, 2025
HomeLatest News18,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ள அமேஸான்!

18,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ள அமேஸான்!

அமேஸான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு ஜனவரி 18 ஆம் திகதி முதல் அறிவிக்கப்படும் என ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில் அமேஸான் பிரதம நிறைவேற்று அதிகாரி அன்டி ஜேசி(Anti JC) தெரிவித்துள்ளார்.

அமேஸானில் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் சுமார் 6 சதவீதமானோர் நீக்கப்படவுள்ளனர்.

செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு வழியாக இத்திட்டத்தை அமேஸான் அமுல்படுத்தவுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு, ஒரு விலகல் கொடுப்பனவு, இடைக்கால சுகாதாரா காப்புறுதி,வெளியக தொழில்வாய்ப்பு உதவி உட்பட உதவிகள் வழங்கப்படும் எனவும் அன்டி ஜேசி (Anti JC) தெரிவித்துள்ளார்.

Recent News