உலகில்தினம் தினம் புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது கனடாவில் ரோபோக்கள் உணவு விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
பொதுவாக பணியாளர்களினால் வீடு வீடாக டெலிவரி செய்யப்படும் உணவு வகைகள் தற்பொழுது ரோபோக்களினால் விநியோகம் செய்யப்படுகின்றன.
வான்கூவாரின் நடைபாதைகளில் இந்த ரோபோக்களை பார்வையிட முடியும். இவை வாடிக்கையாளர்களின் வீடுகளை நோக்கி சென்று உணவை டெலிவரி செய்கின்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகை ரோபோக்கள் பூச்சிய கார்பன் வெளியீட்டைக் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோ போன்ற சில பிரதான நகரங்களில் ரோபோக்கள் உணவு விநியோகம் செய்ய அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்நிலை தொடருமானால் தமக்கான வேலைவாய்ப்புக்களில் பெரும் பாதிப்பு ஏற்படுமென தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.