Saturday, December 28, 2024
HomeLatest Newsசீனி இறக்குமதிக்கு கறுப்புச் சந்தையில் டொலர்களை பெற அனுமதி?

சீனி இறக்குமதிக்கு கறுப்புச் சந்தையில் டொலர்களை பெற அனுமதி?

இந்தியாவின் கடன் வசதியின் கீழ் சீனி இறக்குமதியை செய்ய பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களை புறக்கணித்து விட்டு, கறுப்புச் சந்தையில் டொலர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் அந்நிய செலாவணியை பெற்று சீனியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சிங்கள செய்தி இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வர்த்தக அமைச்சு நேற்று இதற்கான அனுமதியை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனியை இறக்குமதி செய்ய பதிவு செய்துக்கொண்டவர்களோ, அதற்கான விண்ணப்பத்தையோ செய்யாத சிலருக்கு சீனி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டுக்கு தேவையான அத்தியவசிய உணவுப்பொருட்கள் இந்தியாவின் கடன் வசதியின் கீழ் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

இந் நிலையில், நிதியமைச்சரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 17 ஆம் திகதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, பகிரங்க கணக்குகளின் ஊடாக அந்திய செலாவணியை பயன்படுத்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கறுப்புச் சந்தையில் டொலர் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களின் கைகளுக்கு சீனி இறக்குமதி செல்லும் நிலைமை உருவாகியுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Recent News