Thursday, January 23, 2025
HomeLatest Newsஒட்டுமொத்தமாக கண்ணீர் சிந்திய பிக்பாஸ் பிரபலங்கள்! கண்கலங்க வைத்த ப்ரொமோக் காட்சி

ஒட்டுமொத்தமாக கண்ணீர் சிந்திய பிக்பாஸ் பிரபலங்கள்! கண்கலங்க வைத்த ப்ரொமோக் காட்சி

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் நடந்த விடயங்களை பகிர்ந்துக் கொண்டு கண்ணீர் மல்க கடிதம் எழுதி பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி சுமார் 70 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் கலந்து கொண்ட பிரபலங்களில் சுமார் 10 போட்டியாளர்களுக்கு மேல் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று இலங்கை ஜனனி வெளியேற்றப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜனனியின் அன்பு தோழர்களான அமுதவாணன் மற்றும் தனலெட்சுமி அதனை இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் ஜனனி வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் என தேடிக் கொண்டிருந்தார்கள். இதனை தொடர்ந்து வீட்டில் என்ன பிரச்சினை என்றாலும் கண்டிப்பாக அசீமின் பெயர் இருக்கும்.

அந்தவகையில் இந்த பிரச்சினையிலும் அசீமின் பேச்சு இருந்தது. இதனால் கடுப்பான அசீம் அதற்கான தருணங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

கசப்பான அனுபவங்கள்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்கள்.

இதனை கேட்கும் போது அசீம் தன்னுடைய மனைவி குழந்தையை நினைத்து அழுது புலம்பியுள்ளார். இதன்போது விக்ரமன் தன்னுடைய பகையெல்லாம் மறந்து கட்டியனைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.

Recent News