Thursday, January 23, 2025
HomeLatest Newsமீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் இந்த தண்ணீரையா குடித்தார்கள் - வெளியான ஆதாரம்

மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் இந்த தண்ணீரையா குடித்தார்கள் – வெளியான ஆதாரம்

அண்மையில் சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகில் இருந்து பயணிகள் பலர் மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் தற்போது அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.எனினும் இனி நாம் மீண்டும் இலங்கைக்கு போக மாட்டோம்,இலங்கையில் வாழ முடியாது என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தாம் மிகவும் இக்கட்டான சூழ் நிலையில் இவ்வளவு தூரம் வந்துள்ளதாகவும்,பழுப்பு நிற குடி தண்ணீரை 2 நாட்கள் குடித்து,உயிரைக் காப்பாற்றியதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்

Recent News