தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 62 வயதான ஜான் வோர்ஸ்டர் என்பவர்இ தனது வீட்டுக்கு அருகே உள்ள ஸ்டில் பெ கடற்கரையோரங்களில் காலை, மாலைப் பொழுதுகளில் ஒரு குறிப்பிட்ட பொருளை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த படத்தில் இருந்த உருவம் பார்ப்பதற்கு வினோதமாக இருந்ததால் அதை இணையவாசிகள் வேற்றுகிரக உயிரினம் ஏதோ கடலில் இருந்து கரை ஒதுங்குயுள்ளது என்று நினைத்து பீதியடைந்துள்ளனர்.
தென்னாபிரிக்க கடலில் இருந்து வேற்றுகிரக வாசிகள் வெளிவருவதாக அந்த படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் ஜான் வோர்ஸ்டர் எடுத்ததோ கடலில் இருந்து கரை ஒதுங்கிய இறந்த கற்றாழை செடிகளைத்தான்.
அதை அவர் ஒரு ரசனைக்காக வித்தியாசமான பட அமைப்பிற்காக காலையிலும் மாலையும் மங்கும் வெளிச்சத்தில் எடுத்துள்ளார்.
அந்த ஒளியில் கவிழ்ந்து கிடந்த காற்றாலை செடி ராட்சச சிலந்தி போலவும் வேற்றுகிரகவாசி போலவும் இருந்துள்ளது.
குறித்த படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.