Tuesday, December 24, 2024
HomeLatest Newsகனடாவில் குறுஞ்செய்தி ஊடான மோசடி குறித்து எச்சரிக்கை!

கனடாவில் குறுஞ்செய்தி ஊடான மோசடி குறித்து எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றாரியோ குறுஞ்செய்தி ஊடான மோசடி சம்பவம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாண சக்திவளத்துறை அமைச்சினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொடுப்பனவுத் தொகையொன்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக போலி குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெப்பமாக்குதல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக குறுஞ்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பதிலளிக்குமாறு கோரி செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த குறுஞ்செய்திகள் போலியானவை எனவும் நம்பகமற்றவை எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மின்சக்தி வளம் தொடர்பான நிவாரணங்கள் வழங்கப்பட்டாலும், இந்த குறுஞ்செய்தி ஊடான தகவல் பிழையானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது தகவல்களை வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Recent News