Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld News10.7 கோடிக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்து..!

10.7 கோடிக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கையெழுத்து..!

ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தான் முன்மொழிந்த சிறப்பு சார்பியல் கொள்கை, பொது சார்பியல் கொள்கை ஆகியவை குறித்து கைப்பட எழுதிய பிரதி ஏலத்தில் இந்திய மதிப்பில் ரூ.10.7 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

1905 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவியலில் முக்கிய இடம் வகிக்கும் சிறப்பு சார்பியல் கொள்கை, 1915 ஆம் ஆண்டு வெளியிட்ட பொது சார்பியல் கொள்கை என்பன குறித்து ஜெர்மன் மொழியில் விளக்கமளித்து அவர் எழுதிய கட்டுரைகள் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கடந்த 1929 ஆண்டு பெப்ரவரி 3 இல் வெளியானது.

மொத்தம் 14 பக்கங்களைக் கொண்ட சார்பியல் கொள்கையின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டுள்ள இந்தப் பிரதி தற்போது, சீனாவின் ஷாங்காய் நகரத்தில் செப் 28 இல் கிறிஸ்டி ஏல நிறுவனம் நடத்திய ஏல விற்பனையில், ரூ.10.7 கோடிக்கு விற்பனையானது.

இந்தக் கொள்கைகளுடன் தொடர்புடைய இரு சமன்பாடுகள், காலம் இடம் தொடர்பு குறித்து விளக்கும் ஒரு வரைபடம், அறிவியல் சூத்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

Recent News