Tuesday, April 1, 2025
HomeLatest Newsஅஜித், சூர்யா பட வசூலை அடித்து நொறுக்கிய பிரதீப்... 100 கோடியை நெருங்கும் 'லவ் டுடே'!

அஜித், சூர்யா பட வசூலை அடித்து நொறுக்கிய பிரதீப்… 100 கோடியை நெருங்கும் ‘லவ் டுடே’!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து கடந்த 4ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்த பின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது ரசிகர்கள் எழுந்தது.

அதே எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு சென்ற ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்தார் பிரதீப். மாபெரும் வெற்றியை பெற்ற இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 75 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், நேற்று இப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. தமிழ் ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு இணையான ஆதரவை லவ் டுடே படத்திற்கு தெலுங்கு ரசிகர்களும் கொடுத்துள்ளனர்.

தெலுங்கில் வெளிவந்த லவ் டுடே திரைப்படம் நேற்று முதல் நாள் மட்டும் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அஜித் நடிப்பில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்த வலிமை, சூர்யா நடிப்பில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்த எதற்கும் துணிந்தவன் ஆகிய இரு படங்களின் முதல் நாள் வசூலை விட லவ் டுடே அதிக வசூல் செய்துள்ளது.

ஆம், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளிவந்த வலிமை ரூ. 1.7 கோடியும், எதற்கும் துணிந்தவன் ரூ. 1.8 கோடியும் முதல் நாள் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.இப்படியே சென்றுகொண்டிருந்தால் லவ் டுடே கண்டிப்பாக உலகளவில் ரூ. 100 கோடியை கடந்துவிடும் என தெரிவிக்கின்றனர். 

Recent News