Tuesday, December 24, 2024

தரையிறங்கும் போது திடீரென வெடித்த விமான சக்கரங்கள்..!நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்..!

தரையிறங்கும் போது விமானத்தின் சக்கரங்கள் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த எகிப்து ஏர் விமானத்தின் சக்கரங்களே இவ்வாறு வெடித்துள்ளன.

ஆயினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் உயிர்தப்பியுள்ளனர்.

கெய்ரோவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சவூதியின் கடற்கரை நகரான ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அசீஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் தரையிறங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos