Saturday, January 11, 2025
HomeLatest Newsபயணிகளின் பாதுகாப்பு குறித்து விமான சேவை நிறுவனத்தின் விளக்கம்

பயணிகளின் பாதுகாப்பு குறித்து விமான சேவை நிறுவனத்தின் விளக்கம்

சமூக ஊடகங்கள், வதந்திகள் மற்றும் பிற ஊடகங்களில் வெளியாகும் தகவலுக்கமைய, விமான நிலையத்தில் பாதுகாப்பு கெமரா அமைப்புகளை மாற்றவில்லை என்றும் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் எந்த பாதுகாப்பு நடைமுறைகளும் தளர்த்தப்படவில்லை எனவும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில், குறிப்பிட்ட சில பயணிகள் மற்றும் உயரதிகாரிகளின் புறப்பாடு நடைமுறைகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தும் பல்வேறு தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தவறான விளக்கங்கள் அல்லது குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுப்பதாக தெரிவிக்கும் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம், இலங்கையின் கண்ணியம் மற்றும் அதன் பயணிகளின் பாதுகாப்பிற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Recent News