சிரியாவில் காய்கறி சந்தை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 9 போ் பலியாகியுள்ளதுடன், 30 ற்கு அதிகளவானோர் காயமடைந்துள்ளனர்.
அரசுக்கு எதிரான போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள வட மேற்கு சிரியாவில் ஜிஸ்ர் அல் ஜுகூர் நகரிலுள்ள காய்கறி சந்தை மீதே ஞாயிற்றுக்கிழமை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நகரமானது துருக்கி ஆதரவுப் படைகள் மற்றும் ஹயத் தஹ்ரீா் அல் ஷாம் என்ற போராளிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அதனால்,பொதுமக்கள், வடசிரியா விவசாயிகள் அதிகளவில் கூடும் பிரதான காய்கறி சந்தையைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் 9 போ் உயிரிழந்துள்ளதுடன், 30 ற்கும் அதிகளவானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அப்பகுதியின் குடிமைத் தற்காப்பு அமைப்பைச் சேர்ந்த அகமது யாசிஜி தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு எதிரான போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் ஜிஸ்ர் அல் ஜுகூர் நகரம் இருப்பதால் சிரியா அதிபா் பஷாா் ஆசாதின் நெருங்கிய கூட்டாளியான ரஷ்யா இந்த வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.