Thursday, January 23, 2025
HomeLatest Newsகுழந்தைகளின் ஏழ்மையை நீக்கும் நோக்கம்..!விஷேட நிதித் திட்டம் அறிமுகம்!

குழந்தைகளின் ஏழ்மையை நீக்கும் நோக்கம்..!விஷேட நிதித் திட்டம் அறிமுகம்!

ஜெர்மனியில் குழந்தைகளின் நலத்தினை கருத்திற் கொண்டு விஷேட நிதித் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அந்நாட்டின், சமூக நல அமைச்சர் ஈஸா பௌஸ், குழந்தைகளின் ஏழ்மை நிலையை நீக்குவதற்காக ஓர் நிதி திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிதித் திட்டமானது கிண்ட குர்ஷிகர் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த புதிய நிதி திட்டம் அமுலுக்கு வருமாயின் அது குழந்தைகளை ஏழ்மை நிலையில் இருந்து விடுவிக்கும் என்றும் அமைச்சர் ஈஸா பௌஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலில், இந்த கிண்டர் குர்ஷிகர் நிதித் திட்டத்திற்கு 12 பில்லியன் யுரோக்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும்,இந்த புதிய திட்டத்திற்கு நிதி அமைச்சர் கிறிஸ்டியான் லின் தனது ஆதரவை இதுவரை தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recent News