Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld NewsAI உருவாக்கிய மூக்குக் கண்ணாடிகள்: லோ விஷன் க்ளாஸஸ்!!!

AI உருவாக்கிய மூக்குக் கண்ணாடிகள்: லோ விஷன் க்ளாஸஸ்!!!

விவசாயம் தொடங்கி விண்வெளி வரையில் அனைத்து துறையிலும் செயற்கை நுண்ணறிவு Artificial intelligence – AI இன் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது.

அந்த வகையில் தற்சமயம் பார்வைத் திறன் இல்லாதவர்கள் மற்றும் பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் AI தொழில்நுட்பத்தினால் மூக்குக் கண்ணாடியொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

லோ விஷன் க்ளாஸஸ் என்று அழைக்கப்படும் இந்த மூக்குக் கண்ணாடிகளின் ஓரத்தில் ஒரு சிறிய பெட்டி போன்ற அமைப்பு இருக்கும். அந்தக் கண்ணாடியின் முன்னர் புகைப்படங்கள், பணத் தாள்கள் போன்றவற்றை காண்பித்து அதனை ப்ரோகிராம் செய்துகொள்ள வேண்டும்.

மீண்டும் அந்த குறிப்பிட்ட விடயங்கள் மூக்குக் கண்ணாடியின் முன் வரும்போது அதனை குரலால் உணர்த்தும்.

அதேபோல் ஒருவரின் பெயரைக் கொண்டு அவரின் புகைப்படம் பதியப்பட்டுள்ளது என்றால், அந்த நபர் மூக்குக்கண்ணாடி அணியும்போது அவரின் பெயரை அறிவிக்கும்.

Recent News