Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஉக்ரைன் உருவாக்கியுள்ள AI பெண் ஊடக பேச்சாளர் !!!

உக்ரைன் உருவாக்கியுள்ள AI பெண் ஊடக பேச்சாளர் !!!

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மற்றும் அரசாங்க விவகாரங்கள் குறித்த 24 மணி நேர ஊடக சந்திப்புகளுக்காக உக்ரைன் AI- இயங்கும் செய்தித் தொடர்பாளர் ஒன்றை உருவாக்கியுள்ளது.இந்த செய்தித் தொடர்பாளர் உக்ரைனின் வெளியுறவு அமைச்சகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராக தேவையான தகவல்கள் வழங்கப்பட்டவுடன், இந்த கணனி மூலம் உருவாக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் சார்பாக அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராக பத்திரிகை அறிக்கைகளை வெளியிடுவார்.

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட ஒரு நபர் என்பதால் அவளால் எந்த மொழியையும் பேச முடியும்.உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா ஜி என்று அடையாளம் கண்டுள்ளது.ரோசலின் நோப் என்ற பிரபல உக்ரைனிய பாடகியின் உருவம் மற்றும் அசைவுகளை கணனியில் இணைத்து விக்டோரியா ஷீ உருவாக்கப்பட்டது.உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஒரு செய்தித் தொடர்பாளர் ஒருவரை உருவாக்குகிறது என்பதை அறிந்ததும், ரோசலீன் நோப் தனது உருவம் மற்றும் உடல் அசைவுகளை வழங்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.

Recent News