உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக கடந்த மாதம் ரஷ்யாவில் இருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் 2 பேரை ரஷ்ய அரசு வெளியேற்றியிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்த 2 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றி ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரான மத்யூ மில்லர், எங்கள் தூதரக அதிகாரிகளை ரஷ்ய அரசாங்கம் துன்புறுத்துவதை எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்த நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.