Thursday, January 23, 2025
HomeLatest NewsIndia Newsகாதலியை கரம் பிடித்து நான்கு நாட்களில் மறுமணம் - மணக்கோலத்தில் கைதான மன்மதன்..!

காதலியை கரம் பிடித்து நான்கு நாட்களில் மறுமணம் – மணக்கோலத்தில் கைதான மன்மதன்..!

காதலியை திருமணம் செய்து 4 ஆம் நாளில் கணவன் 2 ஆவது திருமணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலையில் ரவி என்பவர் டூ-வீலர் மெக்கானிக் ஷாப் வைத்திருந்த நிலையில் 31 வயதான சுப்ரமணியன் அங்கு வேலை பார்த்து வந்துள்ளார்.

ரவியின் 29 வயதான ரம்யாவை காதலித்த சுப்ரமணியன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.

இவ்வாறிருக்கையில், சுப்ரமணியனுக்கும் வேறு பெண்ணுடன் திருமண நிச்சயத்தார்த்தம் நடந்ததுள்ளது. இதை அறிந்த ரம்யா, அவர் மீது கடலுார் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், அதை வாபஸ் பெற்றால் திருமணம் செய்து கொள்வதாக சுப்ரமணியன் கூறியதால் ரம்யாவும் வாபஸ் பெற்றுள்ளார்.

அதையடுத்து மே 22 ஆம் திகதி காதலர் இருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்ததுள்ளது. இந்நிலையில்
சுப்ரமணியனுக்கு பாதிரிகுப்பத்தை சேர்ந்த அந்த பெண்ணுடன் நேற்றைய தினம் திருமணம் செய்ய மீண்டும் ஏற்பாடு நடந்ததுள்ளது.

இதையறிந்த ரம்யா நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி மகளிர் பொலிசில் புகாரளிக்க பொலிசார் சுப்ரமணியனை தேடி சென்ற போது முன்னர் திருமண ஏற்பாடு செய்த கோவிலில் இருந்து வேறொரு கோவிலுக்கு திருமண ஏற்பாடுகள் மாற்றப்பட்டுள்ளது.

இதனை அறிந்து அங்கு விரைந்த பண்ருட்டி மகளிர் காவல் நிலைய பொலிசார் திருமணத்திற்கு பின்னர் மணக்கோலத்தில் இருந்த சுப்ரமணியனை நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

Recent News