Monday, December 23, 2024
HomeLatest Newsநீண்டகால இடைவெளியின் பின் மீண்டும் தமிழில் நடிக்க வந்த ஸ்ரீதிவ்யா

நீண்டகால இடைவெளியின் பின் மீண்டும் தமிழில் நடிக்க வந்த ஸ்ரீதிவ்யா

அழகான முகம் அலட்டிக்கொள்ளாத நடிப்பு என திரைப்படங்களில் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை பித்து பிடிக்க வைத்த ஒருவரே நடிகை ஸ்ரீதிவ்யா.

இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற திரைப்படமான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே எதார்த்தமான நடிப்பின் வாயிலாக பல கோடி ரசிகர்களை கொள்ளை கொண்டிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து தமிழ் பல படங்களில் நடித்திருக்கின்றார்.

அந்தவகையில் தமிழில் வெளிவந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.ஆனால் இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்தார். அதாவது தெலுங்கில் ஓரிரு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதிவ்யா “மனசார” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் படுத்தப்பட்டார்.

இருப்பினும் இவர் தமிழில் தற்போது ஒரு சில வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இதனால் ஸ்ரீதிவ்யா மீண்டும் எப்போது பழையபடி பிஸியான நடிகையாக தமிழில் வலம் வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது.இந்நிலையில், தற்போது விக்ரம் பிரபுவுடன் இணைந்து ‘ரெய்டு’ எனும் புதிய படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். அப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகிய நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகின்றது. 

Recent News