சிம்பன்சி தனது வாழ்நாள் முழுவதும் கூண்டிலேயே அடைக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முறையாக வானத்தை பார்த்து அதிசயித்து நின்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வெண்ணிலா 28 வயதான சிம்பன்சியே இவ்வாறு அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அது, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கூண்டில் அடைபட்டிருந்த நிலையில் 28 ஆண்டுகளிற்கு பின்னர் தற்பொழுது திறந்து விடப்பட்டுள்ளது.
வெண்ணிலா ஆரம்ப காலத்தில் மருத்துவ ஆய்வு கூடத்தில் வளர்ந்துள்ளதுடன், பின்னர் கலிபோர்னியாவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெண்ணிலாவை மாற்றம் செய்யப்பட்ட சரணாலயம் மூடப்பட்டதால், புளோரிடா சரணாலயத்திற்கு அது கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வளவு காலங்களாக கூண்டிற்குள் அடைபட்டிருந்த சிம்பன்சி இப்போது திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் அது வெளி உலகத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளது. அது குறித்த காணொளிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.