Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஆப்கானியர்கள் வெளியேற அவகாசம் வேண்டும் - பாகிஸ்தானுக்கு தலிபான் கோரிக்கை..!

ஆப்கானியர்கள் வெளியேற அவகாசம் வேண்டும் – பாகிஸ்தானுக்கு தலிபான் கோரிக்கை..!

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக 17 இலட்சம் ஆப்கானியர்கள் தங்கியிருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஆப்கானியர்கள் அனைவரும் நவம்பர் 1ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

இல்லையெனில் கட்டா யமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் அரசு அறிவித்தது. கடந்த மாத தொடக்கத்தில் வெளியான இந்த அறிவிப்புக்கு பிறகு 1 இலட்சத்து 30 ஆயிரம் ஆப்கானியர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளதாக டோர்காம் மற்றும் சாமன் எல்லைச்சாவடி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் கெடு முடிவுக்கு வருவ தால் தடுப்புக் காவலில் வைக்கப்படலாம் அல்லது தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ஆயிரக் கணக்கான ஆப்கானியர்கள் எல் லைச்சாவடிகளில் அணிவகுத்து நிற்கின்றனர்.

இந்நிலையில் தலிபான் அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ” ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர் காலத்தில் இலட்சக்கணக்கான ஆப்கானியர்களுக்கு அடைக் கலம் கொடுத்த பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுக்கு நன்றி. பாகிஸ்தானை விட்டு வெளியேற யாரையும் கட்டாயப்படுத்த கூடாது ஆப்கானியர் களுக்கு கூடுதல் அவகாசம் தரவேண்டும் ” என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Recent News