ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய ஏரோஃப்ளோட் பயணிள் விமானம் தொடர்பில் அயர்லாந்திலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனு காரணமாக கொழும்பு வர்த்தக நீதிமன்றம் குறித்த விமானம் நாட்டைவிட்டு வெளியேற தடைவிதித்திருந்தது.
இதனால் ரஷ்யாவிற்கும் – இலங்கைக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன் விமான சேவையையும் நிறுத்தப்பட்டது.
எனினும் நீதிமன்றம் பின்னர் தடையை நீக்கியதுடன் அண்மையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த செயலுக்கு பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார்.
இந்த நிலையிலேயே கட்டுநாயக்காவுக்கான விமானசேவை இடம்பெறுமென குறித்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது.