Monday, December 23, 2024
HomeLatest Newsதந்தையை கட்டியணைத்த நடிகர் விஜய் : வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலடி

தந்தையை கட்டியணைத்த நடிகர் விஜய் : வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலடி

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அவரது தந்தை எஸ்.ஏ.சி சந்திரசேகரை சந்தித்து ஆரத்தழுவி கொண்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 66வது திரைப்படமான வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த விழாவில் இயக்குநர் வம்சி, இசையமைப்பாளர் தமன், நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, பாடகி மானசி, பாடலாசிரியர் விவேக் ஆகிய முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

குடும்ப பாசம், தாய் மகன் உறவு ஆகியவற்றை குறித்த படமாக விஜய்யின் வாரிசு திரைப்படம் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி சந்திரசேகர், தாயார் ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த திரைப்படத்தின் முக்கிய நடிகர்களான பிரகாஷ் ராஜ், சரத்குமார், ராஷ்மிகா, இயக்குநர் வம்சி ஆகியோர் பேசிய பிறகு இறுதியாக நடிகர் விஜய் என் நெஞ்சில் குடியிருக்கும் என்று பேச தொடங்கினார்.

அப்போது ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்றை கூறிய நடிகர் விஜய், “எனக்கு போட்டியாக 1992 இல் நடிகர் ஒருவர் வந்தார்; அவரை ஜெயிக்க வேண்டும் என்று நான் ஓடினேன்.

ஆனால் அவர் நான் எங்கு சென்றாலும் கூடவே வந்தார். அவரை ஜெயிக்க வேண்டும் என்று முயற்சித்து முயற்சித்து தற்போது இந்த இடத்தில் இருக்கிறேன். அந்த நடிகர் பெயர் ஜோசப் விஜய்.. ஆம் அது நான்தான் என்றார்”.

சமீபத்தில் தனது பெயரை பயன்படுத்தி அரசியல் செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்து தந்தை எஸ்.ஏ.சி சந்திரசேகர் மீது நடிகர் விஜய் கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது.

Recent News