Wednesday, January 22, 2025
HomeLatest Newsயாழ் இளைஞனுக்கு நடிகர் விஜய் அளித்த கௌரவம்!

யாழ் இளைஞனுக்கு நடிகர் விஜய் அளித்த கௌரவம்!

யாழில் இளைஞர் ஒருவர் எடிட் செய்த கிராஃபிக் டிசைன் புகைப்படத்தை தளபதி விஜய் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மகிழ்ச்சிகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர் யாழ். நகரைச் சேர்ந்த கஜேந்திரன் எனவும் அவர் கணிணி தொழில்நுட்ப கல்வி பயின்றதையடுத்து கிராஃபிக் டிசைனில் அதிக ஆர்வமுள்ளதால் அந்த தொழிலை எடுத்து செய்து வருகின்றார்.

இதனையடுத்து கடந்த 28ம் திகதி இயக்குநர் வம்சி தயாரிப்பில் உருவாகி தைப்பொங்கல் அன்று வெளிவர தயாராக இருக்கும் தளபதி வாரிசு படத்தின் புகைப்பட்ங்கள் வெளிவந்து மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அன்றையதினம் குறித்த இளைஞர் அதிலிருந்து ஒரு புகைப்படத்தை தேர்ந்தெடுத்து அதனை அவரின் அறிவாற்றலை பயன்படுத்தி எடிட் செய்து ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் அவர்களை டேக் செய்து பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு நாட்கள் கழித்து தளபதி விஜய் அவரின் எடிட் செய்த புகைப்படத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் டிபி ஆக வைத்ததையடுத்து அந்த இளைஞருக்கு வாழ்த்து மழை குவிந்த வண்ணம் உள்ளன.

அவர் தளபதி விஜய் நான் செய்த எடிட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது அவருக்கு நன்றி கூறிக்கொண்டு ஒருதடவையாவது அவரை பார்த்துவிடவேண்டுமென்று உருக்கமாக பேசியுள்ளார்.

மேலும் குறித்த இளைஞர் ‘விக்ரம்’ பட கமலின் டிசைனை செய்து ‘விக்ரம்’ பட நிகழ்ச்சியில் அந்த டிசைன் வைக்கப்பட்டு பாராட்டுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Recent News