Monday, December 23, 2024
HomeLatest Newsநடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைில் அனுமதி! தற்போதைய நிலைப்பாடு என்ன?

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைில் அனுமதி! தற்போதைய நிலைப்பாடு என்ன?

நடிகர் கமல்ஹாசன் உடல்நல கோளாறால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

தமிழ் சினிமாவில் உலகநாயகனாக வலம்வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக நடித்து வருகின்றார். இதுமட்டுமின்றி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சினையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தைச் சந்தித்ததுடன், சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நேற்று சென்றை திரும்பினார்.

இந்நிலையல் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.தற்போது இன்று காலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recent News