Monday, January 27, 2025
HomeLatest Newsபடையினரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை!

படையினரை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முப்படைகளை அங்கிருந்து வெளியேற்ற நேரிடும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை அங்கிருந்து வெளியேற்றுமாறு பல தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எனினும் இது தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அத்தகைய தீர்மானம் விரைவில் எடுக்கப்படலாமென்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Recent News