Tuesday, December 24, 2024
HomeLatest Newsதிருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்களின் அதிரடி முடிவு!

திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்களின் அதிரடி முடிவு!

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் பேரணி நடத்தியுள்ளனர்.

இந்தியாவில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சமநிலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது.இதனால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. சில மாநிலங்களில் பெண்களைத் திருமணம் செய்ய வரதட்சணை கொடுக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அது போல் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் இணைந்து இந்தியாவில் மகாராஷ்டிராவில் சோலாப்பூரில் பேரணி நடத்தியுள்ளனர். இந்தப் பேரணியில் அதிகமான ஆண்கள் மணமகன் போன்று ஆடையணிந்து கலந்து கொண்டனர்.

சிலர் மணமகன் போல் அலங்காரம் செய்து கொண்டு பேண்ட் வாத்தியங்கள் முழங்க குதிரையில் மணமகன் போல் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் தங்களுக்குத் திருமணம் செய்ய அரசு பெண் ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனுகொடுத்தனர்.

அவர்கள் தங்களது மனுவில், தாயின் வயிற்றில் இருக்கும் கருவின் பாலினத்தை கண்டறிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் நிறுவனர் ரமேஷ் இப்பேரணி குறித்து தெரிவிக்கையில், இந்தப் பேரணியை சிலர் கிண்டல் செய்யலாம்.

ஆனால் ஆண் பெண்கள் விகிதாச்சாரம் மாறுபட்டு இருப்பதால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

மகாராஷ்டிராவில் ஆயிரம் ஆண்களுக்கு 889 பெண்கள்தான் இருக்கின்றனர். இதற்குக் காரணம் பெண் சிசுவதைதான். பெண் சிசுவதையைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது” என குற்றம் சாட்டினார்.

Recent News