Wednesday, December 25, 2024
HomeLatest Newsவட்ஸ்அப் சமூக வலைத்தளத்தின் அதிரடி அறிவிப்பு!

வட்ஸ்அப் சமூக வலைத்தளத்தின் அதிரடி அறிவிப்பு!

தகவல் தொழில்நுட்ப விதிமீறல்களுக்காக, இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 23.87 இலட்சம் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெறுப்புணா்வை தூண்டும் பேச்சுகள், தவறான தகவல்கள், பொய் செய்திகள் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த கடுமையான விதிமுறைகள் மத்திய அரசால் கடந்த ஆண்டு அமுல்படுத்தப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் , 50 இலட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள், பயனாளா்களிடம் இருந்து புகாா்கள் பெற தனி கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். புகாா் விபரங்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிட வேண்டும்.

அந்த வகையில், வட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட கடந்த ஜூலை மாதத்துக்கான அறிக்கையில், விதிமீறல்களுக்காக 23.87 இலட்சம் இந்திய வட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த ஜூன் மாதம் 22 இலட்சம் கணக்குகளும், மே மாதம் 19 இலட்சம் கணக்குகளும், ஏப்ரலில் 16 இலட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலையில் 23.87 இலட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக , 14 லட்சம் கணக்குகள், முறைப்பாடுகள் கிடைக்கப் பெறும் முன்பே முடக்கப்பட்டன; விதிமீறலை தாமாக கண்டறியும் மென்பொருள் கட்டமைப்பின் மூலம் இக்கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News