Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsபாதுகாப்பு அமைச்சரின் கருத்தால் கடுப்பான பகிஸ்தான்..!

பாதுகாப்பு அமைச்சரின் கருத்தால் கடுப்பான பகிஸ்தான்..!

இந்தியா தனது கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கத் தயாராக இருப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் கூறியிருப்பதை பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளது.

கார்கில் போரை நினைவுகூரும் வகையில், 24-வது கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு ராஜ்நாத் சிங் இந்த அறிக்கைகளை வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்த பாகிஸ்தான், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டது என்று வலியுறுத்தியதுடன், இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

Recent News