Friday, January 24, 2025
HomeLatest Newsஇந்து கோயிலில் நிர்வாணமாக ஆடிய இளம் பெண்...!வழக்கு பதிவு செய்யாத பொலிஸார்..!பெரும் பரபரப்பு..!

இந்து கோயிலில் நிர்வாணமாக ஆடிய இளம் பெண்…!வழக்கு பதிவு செய்யாத பொலிஸார்..!பெரும் பரபரப்பு..!

இந்து கோயில் இளம்பெண் ஒருவர் திடீரென ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக ஆடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியில் உள்ள ஒரு கோயிலிலே ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒரு பெண் சுற்றுலாப் பயணி ஆடைகளைக் இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த இந்தோனேசிய போலீசார் அவரை மனநல சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,

28 வயதான தர்ஜா துஷின்ஸ்கி என்பவரே இவ்வாறு நிர்வாணமாக ஆடியுள்ளார். அவர் விடுமுறையைக் கழிக்கும் நோக்கில் பாலி சென்ற நிலையில் ஹோட்டல் கட்டணத்தையும் செலுத்தத் தவறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இதனால், பாலியில் தங்குவதற்கு பணம் இல்லாததால் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், உபுடில் உள்ள சரஸ்வதி கோயிலில் நடந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க சென்றுள்ளார். திடீரென அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் நடனக் கலைஞர்கள் நடனமாடும் போதும் திடீரென நிர்வாணமாக தர்ஜா துஷின்ஸ்கி மேடை ஏறியுள்ளார்.

மேலும், சன்னதிக்கு உள்ளேயும் நிர்வாணமாக நுழைய முயற்சி செய்த அவரை பொலிஸார் அதற்கு முன்னர் கைது செய்துள்ளனர்.

இருப்பினும், அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மீண்டும் ஜெர்மனிக்குத் திரும்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு அவர் மறுத்த நிலையில், அவரை அங்குள்ள மனநல மையத்திற்குச் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.

அத்துடன், அவர் தனது விடுதியிலும் கூட ரூமிற்கு வெளியேயும் நிர்வாணமாகச் சுற்றிக் கொண்டிருந்த போதிலும், ஹோட்டல் ஊழியர்கள் இது குறித்துப் புகாரளிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

Recent News