Monday, December 23, 2024
HomeLatest Newsசிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞன் திடீரென உயிரிழப்பு

சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞன் திடீரென உயிரிழப்பு

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23 வயதான இந்த இளைஞனுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கந்தகெட்டிய பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற குழுவுடன் இணைந்து இந்த இளைஞன், சிவனொளிபாத மலையில் ஏறிக்கொண்டிருந்த போது, இன்று அதிகாலை திடீரென சுகவீனமுற்றுள்ளார்.

மிகஹாகிவுல கரமெட்டிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைஞனின்  உடல் பிரேதப்பரிசோதனைக்காக கிலேன்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் நல்லத்தண்ணி பொலிஸார் கூறியுள்ளனர்.

Recent News