Monday, January 27, 2025
HomeLatest Newsவெளிநாடு செல்ல முடியாத சோகத்தில் உயிரை மாய்த்த இளைஞன் - இலங்கையில் சம்பவம்

வெளிநாடு செல்ல முடியாத சோகத்தில் உயிரை மாய்த்த இளைஞன் – இலங்கையில் சம்பவம்

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளமை அவர்களின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது கனவு உலகத்தை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை என பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு வேலைக்கான தனது கனவை நனவாக்க முயன்ற இளைஞனின் உடல் கூரையில் தொங்கிய நிலையில் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். கசுன் அஞ்சன ஜயசிங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் சமீபகாலமாக எப்படியாவது வாழ்க்கையை வெற்றி பெற வேண்டும் என்று கொத்தனார் ஒருவரிடம் உதவிக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் கொரிய பரீட்சை எழுதியவர் 5 புள்ளிகளை இழந்ததால் மனமுடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளில் மூத்த மகனான கசுன் அஞ்சனா குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு தனது விருப்பத்திற்கு ஏற்ப பெற்றோரை நடத்த முடியாமல் தவித்து வந்ததாக தாய் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய தங்கை பொருட்கள் விநியோகம் செய்யும் இடத்தில் தற்காலிக வேலையில் இருப்பதாகவும், தம்பி இந்த ஆண்டு சாதாரண தர எழுதப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Recent News