Tuesday, December 24, 2024
HomeLatest Newsநரகத்தை நோக்கி மிக வேகமாக பயணிக்கும் உலகம் - ஐ.நா. பொதுச் செயலா் எச்சரிக்கை!

நரகத்தை நோக்கி மிக வேகமாக பயணிக்கும் உலகம் – ஐ.நா. பொதுச் செயலா் எச்சரிக்கை!

பருவநிலை விவகாரத்தில் நரகத்தை நோக்கி உலகம் மிக வேகமான பயணத்தை மேற்கொண்டு வருகிறது என எகிப்தில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ்(António Guterres) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இன்னும் சில நாட்களில் உலகின் மக்கள்தொகை ஒரு புதிய மைல்கல்லை எட்டவிருக்கிறது. உலகின் 800 கோடியாவது குழைந்தை அப்போது பிறக்கப்போகிறது.

அந்தக் குழந்தை வளா்ந்து, பூமிக்கு நாம் என்ன செய்தோம் என்று கேட்டால் அதற்கு நம்மால் என்ன பதிலை சொல்ல முடியும்? நமது வாழ்நாளில் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.

ஆனாலும், அந்தப் போராட்டத்தில் தோல்வியடைந்து வருகிறோம். பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக வெப்பநிலை தொடா்ந்து கூடி வருகிறது.

இதன், காரணமாக, மீளவே முடியாத பருவநிலை சீரழிவை நோக்கி உலகம் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. பருவநிலை நரகத்தை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில், அதிவேகமான பயணத்தை நாம் அனைவரும் மேற்கொண்டு வருகிறோம்.

புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் தற்போது ‘அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. மேலும், ‘சிகிச்சை உபகரணங்கள் தடதடத்து வருகின்றன.

எனவே, அந்த ஒப்பந்தம் மீளவே முடியாத முடிவை எட்டும் ஆபத்தில் உள்ளது. அந்த ஒப்பந்த இலக்கை எட்டுவதற்காக வளா்ச்சியடைந்த நாடுகளும் வளா்ந்து வரும் நாடுகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை இந்த மாநாட்டில் மேற்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Recent News