Monday, December 23, 2024
HomeLatest Newsதேர்தலில் போட்டியிட இருந்த பெண் ஒருவர் வெட்டி கொலை!

தேர்தலில் போட்டியிட இருந்த பெண் ஒருவர் வெட்டி கொலை!

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடைப் பிரதேசத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவிருந்த 65 வயதான பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை – யொகொதமுல்லையில் உள்ள அவரது வீடும் தீ வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த பெண் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் இம்முறை தேர்தலில் போட்டியிட இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கம்பஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News