பெண் ஒருவர் தான் பிறந்ததிலிருந்து கிட்டத்தட்ட 105 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த எல்சி ஆல்காக் என்பரே இவ்வாறு வசித்து வருகின்றார்.
எல்சி ஆல்காக், 1918-ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் ஹுத்வைட்டின் மையத்தில், பார்கர் தெருவில் உள்ள ஒரு அழகான இரண்டு படுக்கையறை வீட்டில் பிறந்துள்ளதுடன், தற்போது 105 வயதாகும் அவர், ஆச்சரியப்படும் விதமாக இன்னும் அதே வீட்டில் வாழ்ந்து வருகின்றார்.
அதிகாரிகள் கேட்டாலும் தன்னால் இந்த வீட்டை விட்டு வேறு எங்கேயும் சென்று வசிக்க முடியாது என்பதில் உறுதியாகவுள்ளார். அத்துடன், இவருக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு பேர குழந்தைகளும் , 14 கொள்ளு பேரக்குழந்தைகளும், 11 எள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், எல்சி இன்னும் சில நாட்களில் தனது 105 வது பிறந்த நாளை தான் 105 வருடங்களாக வாழ்ந்த அதே வீட்டிலேயே தனது கொண்டாடவுள்ளார்.
தன் வாழ்நாளில் இதுவரை இரண்டு உலகப் போர்கள், நிலவில் மனிதன் முதல் காலடி வைத்த தருணம், பெருந்தொற்றுக்கள் என அனைத்தையுமே அதே வீட்டில் கடந்து வந்துள்ளார். பிரித்தானியாவில் 22 பிரதமர்கள் மற்றும் 5 முடியாட்சிகள் ஆகியவற்றையும் கண்டுள்ளார்.
அந்த வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்த எல்சிக்கு மொத்தம் ஐந்து பேர் சகோதரங்கள் காணப்பட்டுள்ளனர். 1941 ஆம் ஆண்டு திருமணமான பிறகும் அதே வீட்டில் வசித்துள்ளார்.
அத்துடன், இந்த வீட்டை ஆரம்பத்தில் கடன் வாங்கியே சொந்தமாக்கிக் கொண்டதாகவும், அந்த நேரத்தில் 250 பவுண்டுகள் கிடைக்காமல் அவதிப்பட்டதாகவும், பின்பு கடன் வாங்கி தான் இந்த வீட்டை சொந்தமாக்கிக் கொண்டதாகவும், 2022 இல் அவர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.ஆயினும் அப்போது 250 பவுண்டுகளுக்கு வாங்கிய இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 75,000 பவுண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் பெரிதாக எந்தவித மாற்றங்களும் செய்ததில்லை. இங்கு இருப்பதைவிட நான் வேறு எங்கேயும் சந்தோஷமாக இருந்ததில்லை என்று எல்சி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எல்சியின் கணவர் காலமாகிவிட்டாலும், தன்னுடைய மகன் ரேவுடன் கடந்த 26 அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.