Wednesday, December 25, 2024
HomeLatest NewsSrilanka Newsதிருமண கோலத்தில் வந்து ஆசிரிய நியமனத்தை ஏற்ற பெண்..!

திருமண கோலத்தில் வந்து ஆசிரிய நியமனத்தை ஏற்ற பெண்..!

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நேற்று தனது திருமண பந்தத்திற்கு தயாரான யுவதி ஒருவர், தனது திருமண ஆடை அலங்காரத்துடன் தனது ஆசிரிய நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக நிகழ்விற்கு வருகை தந்துள்ளார்.

அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த திலினி என்ற பெண்ணே இவ்வாறு வருகை தந்துள்ளார்.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (30) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News