Tuesday, December 24, 2024
HomeLatest Newsநாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட பெண்- பரபரப்பு சம்பவம்!

நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட பெண்- பரபரப்பு சம்பவம்!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் நாய் குறைத்ததால் ஏற்பட்ட தகராறில் பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேசத்தின் கிஹர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லால் முனியா(50). இவரது பக்கத்து வீட்டு நபர் ஒருவர் நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு முனியா தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது பக்கத்து வீட்டு நாய் குரைத்ததுடன் கடித்துள்ளது.

இதனால் அதன் உரிமையாளரிடம் முனியா வாக்குவாதம் செய்துள்ளார். இது இரு குடும்பத்தினருக்கும் இடையே பெரிய தகராறாக மாறியுள்ளது.

ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் ஆறு பேர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான லால் முனியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் முனியாவின் மகன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார், அண்டை வீட்டாரான சிவசாகர் பிந்த், அவரது மகன் அஜித் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.  

Recent News