Wednesday, December 25, 2024
HomeLatest Newsகாட்டுப் பகுதியில் 3 நாட்களாக அலறியபடி நிர்வாணமாக திரிந்த பெண்..!

காட்டுப் பகுதியில் 3 நாட்களாக அலறியபடி நிர்வாணமாக திரிந்த பெண்..!

காட்டு பகுதியில் அடைக்கல ஏதுமின்றி நிர்வாணமாக அலறியபடி அலைந்து திரிந்த பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார்.

கம்பளை – அம்புலுவாவ சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறியபடி சுற்றித்திரிந்த பெண்ணையே கம்பளை தலைமையக பொலிஸார் இன்று கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

சுமார் மூன்று நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்த உள்ளூர்வாசிகள் குழு, குறித்த வனப்பகுதிக்குள் சென்று ஆராய்ந்துள்ளனர்.

அப்போது ஒரு பெண் உடலில் ஆடை இன்றி இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதையடுத்து கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று அங்கு சென்றுள்ளதுடன் பெண்ணுக்கு ஆடை அணிவித்த பின்னர் அதிகாரிகள் தமது காவலில் அழைத்து சென்றுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், குறித்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிவதற்காக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recent News