Thursday, January 23, 2025
HomeLatest Newsஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார் - ஐ.நா பொதுச் செயலாளர் உரை!

ஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார் – ஐ.நா பொதுச் செயலாளர் உரை!

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம் நவம்பர் மாதம் 25 திகதி அன்று கொண்டாடப்படுகிறது . இதையொட்டி பேசிய ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் உலகிலேயே மிகவும் பரவலான மனித உரிமை மீறலாகும், ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும், ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய துணை அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் covid-19 தொற்றுநோய் முதல் பொருளாதாரக் கொந்தளிப்பு வரையிலான பிற அழுத்தங்கள் தவிர்க்க முடியாமல் இன்னும் அதிகமான உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்பதை நாங்கள் அறிவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெண் மீதான வெறுப்பு , பாலியல் துன்புறுத்தல், உருவ துஷ்பிரயோகம் வரையிலான வன்முறைகளை பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்வதாகவும் அன்டோனியோ குட்டரேஸ் கூறினார்.                   

இதேபோல் ‘இந்த பாகுபாடு, வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவை மனிதகுலத்தின் பாதியை குறிவைக்கிறது.  இது வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்களிப்பைக் கட்டுப்படுத்துகிறது. அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மறுக்கிறது, மேலும் நமது உலகத்திற்குத் தேவையான சமமான பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியைத் தடுக்கிறது’ என்றும் அவர் கூறியுள்ளார்.

Recent News