Wednesday, December 25, 2024

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பரப்புகளில் மணிக்கு 60, 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் அலைகளும் எழக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Latest Videos