Tuesday, December 24, 2024

சீனா- வியட்நாம் எல்லையில் கட்டுப்பாட்டை இழந்த வேன் – 11 பேருக்கு நேர்ந்த விபரீதம்..!

சீனா-வியட்நாம் எல்லையில் நேற்றைய தினம் வேன் கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த சாலை விபத்தில் ஒன்பது வியட்நாம் குடிமக்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் குவாங்சி ஜூவாங் பிராந்தியம் ஜிங்சி நகரில் உள்ள மலைப்பகுதியில் வேன் ஒன்று பயணித்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் சீனாவை சேர்ந்த ஓட்டுனர், உதவியாளர், இரண்டு வியட்நாம் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த சாலை விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos