Monday, December 23, 2024
HomeLatest Newsநாய்களிற்கு தனியான ஐஸ்கிரீம் பார்லர்..!ஜேர்மனியில் அசத்தல்…!

நாய்களிற்கு தனியான ஐஸ்கிரீம் பார்லர்..!ஜேர்மனியில் அசத்தல்…!

நாய்களிற்கென தனியாக ஐஸ்கிரீம் பார்லர் நடத்தப்படுகின்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஜேர்மனியின் தலைநகரில் உள்ள பெர்லினிலே இந்த நாய்களிற்கான ஐஸ்கிரீம் பார்லர் இயங்கி வருகின்றது.

அங்கு, நாய்களுக்கென பிரத்யேகமான ஐஸ்கிரீம்ங்கள் பரிமாறப்பட்டு வருகின்றது.

அதாவது, நாய்களிற்கு ஒவ்வாமை பிரச்சினை இருப்பதால், லாக்டோஸ் இல்லாத தயிர் மற்றும் கிரீம் சீஸிலிருந்து, வாழைப்பழம், ஸ்டிராபெர்ரி, கேரட் என்று விதவிதமான ஃபிளேவர்களில் ஐஸ்கிரீம்ங்கள் தயாரித்து பரிமாறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நாய்களிற்கு இந்த ஐஸ்கிரீமின் சுவை பிடித்துள்ளதால் அதன் உரிமையாளர்களிடையே அந்த கடைக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News