Tuesday, January 28, 2025
HomeLatest Newsகாஷ்மீரில் மூக்கை நுழைக்கும் மூன்றாம் நாடு -தயார் நிலையில் வான்படை!

காஷ்மீரில் மூக்கை நுழைக்கும் மூன்றாம் நாடு -தயார் நிலையில் வான்படை!

கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த பாக்கிஸ்தான் படைத்தளபதி குவமர் ஜாவ்ட் பஜ்வா, இந்தியா உடன்பட்டால் காஷ்மீர் விவகாரத்தில், தீர்வுகளை கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் சம்மதம் என கூறியிருந்தார். இதற்கு முன்னர் இருந்தே அமெரிக்கா, பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து காஷ்மீர் தொடர்பான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது.

இந்த இரண்டையும் வைத்து பார்க்கும் போது பாகிஸ்தான் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வதாகவும் இந்தியா அதனை விரும்பாமல் இருப்பதாகவும் ஒரு தோற்றப்பிழை உருவாகிறது.

ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால்,  அமெரிக்கா பிரச்சினைகளை இரண்டு நாடுகளும் இணைந்து முடித்துக்கொள்ள வேண்டும் எனக் கூறுவதன் அர்த்தம், காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதே.

கடந்த வாரம் பாகிஸ்தான் விஜயம் செய்திருந்த பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதுவர் donald blome, பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பிரதேசத்தை விடுதலை அடைந்த காஷ்மீர் எனும் அர்த்தத்தில் azad kashmir என குறிப்பிட்டிருந்தார். இவர் ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு ஆலோசகராக பணிபுரிந்ததால் இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள மோதல்களும் காஷ்மீர் பிரதேசம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் அறியாமல் இந்த வசனத்தை கூறவில்லை என்பது புரிந்துகொள்ளக் கூடிய விடயம். எனவே அமெரிக்காவின் நோக்கம் காஷ்மீர் பாகிஸ்தானிற்கும் உரித்துடையது, அதனை இந்தியா விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதே. இதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பிலாவில் பூட்டோ, ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் இடையே இரு தரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றிணைந்து காஷ்மீர் தொடர்பான தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் விசாரணைகளுக்கு உடன்பட வேண்டும் என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

ரஷ்யா விடயத்தில் மேற்கு நாடுகள், எண்ணெய் கொள்வனவு செய்ய வேண்டாம், ஆயுத உற்பத்திகளில் ரஷ்யாவுடன் இணைய வேண்டாம் என மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்தும், இந்தியா இதற்கு செவி சாய்க்காமல் தனது வெளிவிவகார கொள்கைகளில் திடமான நிலையில் உள்ளதால், வேறு வழியின்றி பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்கலாம் என முயற்சி செய்கின்றன மேற்கு நாடுகள். ஏற்கனவே அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்து வரும் ஐரோப்பிய நாடுகள் இவ்வாறு அமெரிக்கா ஆதரிக்கும் விடயத்திற்கு தாங்களும் ஆதரவு வழங்குவது புதிய விடயமல்ல. ஆனால் இதற்கு செவிசாய்க்க வேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவிற்கு இல்லை. எனவே இதற்கு தக்க பதிலடியை இந்திய வெளிவிவகார அமைச்சு வழங்கியுள்ளது. 

இதுதொடர்பாக பதில் வழங்கிய இந்திய வெளிவிவகார அமைச்சர் s. ஜெய்ஷ்ங்கர், “காஷ்மீர் குறித்து பேசுவதற்கு வேறு நாடுகளுக்கு எந்த தேவையும் இல்லை இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடைப்பட்ட இருதரப்பு பிரச்சனை. பாகிஸ்தான், காஷ்மீர் பிரதேசத்தை பிரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதை விட்டு முதலில் அங்கே ஊடுருவும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும்” என நேரடியாக பதில் ஒன்றை வழங்கியிருந்தார்.

இதே விவகாரத்தில் பதில் வழங்கியிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடக தொடர்பாளர் அறிந்தம் பஜ்வாரி குறிப்பிடும் போது, “சர்வதேச நாடுகளுக்கு காஷ்மீர் விவகாரத்தில் உள்ள உரிமை அங்கு நடக்கும் தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது மற்றும் அவற்றை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது மாத்திரமே” என கூறியுள்ளார். 

இவ்வாறு காஷ்மீர் பிரச்சனையை தீவிரப்படுத்தி இந்தியா மீதான அழுத்தங்களை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கு பாகிஸ்தான் மேற்கு நாடுகளுடன் இணைந்து முயற்சி செய்கிறது. இதற்கு ராஜாங்க ரீதியில் தக்க பதிலடி கொடுத்து சரியான நிலையைக் கையாண்டு வரும் இந்தியா, எவ்வாறாயினும் தனது எல்லையை பாது காப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் பின்நிற்கவில்லை. இதற்காக இந்திய வான் படையை அதிரடியாக தயார் செய்து வருகிறது. பாகிஸ்தான் வேறு எந்த நாட்டுடன் இணைந்து எந்த ஒரு சதி செய்தாலும் அல்லது திடீரென தீவிரவாதிகள் மூலம் தாக்குதல்களை மேற்கொள்ள நினைத்தாலும் அதை முறியடிப்பதற்கு இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்பது கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி நடைபெற்ற இந்திய வான்படையின் 90 ஆவது ஆண்டு நிறைவு கண்காட்சிகளின் போது வெளியாகியுள்ளது. 

இந்த நிகழ்வின்போது தற்போது உள்ள வான்படையின் தகவல்கள் குறித்து இந்திய வான்படை தளபதி விவேக் ரம் சோளதாரி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

அவர் கூறிய முக்கியமான விடயம் தற்போது உள்ள வான் படை போர் தந்திரோபாய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவில்லை. மாறாக இது மூலோபாய ரீதியில் எதிரி நாட்டில் அமைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். இதன் அர்த்தம் ஒவ்வொரு ஆபத்தையும் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும், வெளிநாடுகள் இடம் இருந்தும் எந்த வகையான ஆபத்துகளை எதிர் நோக்க முடியும், அவற்றை சமாளிப்பதற்கு இந்திய வான்படைக்கு என்ன தேவையாக இருக்கும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதே. 

இதனை விவரிக்கும்போது இந்திய வான் படையில் உள்ள சில முக்கியமான அபிவிருத்திகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முதலாவதாக இந்தியாவின் மென் போர் விமான தகமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
முதல் முறையாக LAC படை 01 ஜூலை 16 அன்று உருவாக்கப்பட்டது. இன்றுவரை, 16 LAC IOC கட்டமைப்பில் வான்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 10 FOC விமானங்கள் வான்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன, மேலும் நான்கு கொள்வனவு செய்யப்படவுள்ளன.

2022-23 நிதியாண்டில் மீதமுள்ள FOC விமானங்களையும் நான்கு IOC இரட்டை இருக்கை விமானங்களையும் கையளிப்பதாக HAL தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக வான்படை, 83 LCA Mk 1A ஐ கொள்வனவு செய்ய உள்ளது, இதற்காக HAL உடன் 25 ஜனவரி 21 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 24 முதல் இவை கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து அதிநவீன மத்திய எல்லைத் தாக்குதல் விமானங்கள். இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி அமைப்பு இந்தியாவிற்கான அதிநவீன மத்திய எல்லை தாக்குதல் விமானங்களை சுய தயாரிப்பு அடிப்படையில் மேற்கொள்வதற்கு ஆர்வமாக உள்ளது. இந்திய வான் படையும் DRDO வும் இணைந்து 5ஆம் தலைமுறை AMCA விமானங்களை தயாரிக்க உள்ளதோடு இவை 2035ஆம் ஆண்டிற்குள் செயற்பாட்டிற்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக MRFA என அழைக்கப்படும் மத்திய எல்லை தாக்குதல் விமான தொகுதிகள். இந்தியா தற்போது உள்ள மத்திய எல்லைத் தாக்குதல் விமானங்களை மொத்தம் ஆறு தொகுதிகளாக பிரித்து சேவையில் இணைக்க திட்டமிட்டுள்ளது.

அத்தோடு அடுத்ததாக தியேட்டர் படைப்பிரிவுகள் உருவாக்கப்படுவதன் மூலம் வான்படை, கடற்படை மற்றும் தரைப்படைகள் இணைந்து ஒரே கட்டளையின் கீழ் செயல்படும் விதமாக, உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் எந்த பகுதியில் எந்த எதிரி நாடு தாக்குதல்களை மேற்கொண்டாலும் ஒரே சமயத்தில் சமாளிக்கக்கூடிய தகைமையும் விரைவில் உருவாக்கப்பட உள்ளதாக வான்படை தளபதி உறுதி அளித்துள்ளார்.

Recent News