Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsகாஸாவில் அமுலுக்கு வந்தது தற்காலிக போர் நிறுத்தம்..!

காஸாவில் அமுலுக்கு வந்தது தற்காலிக போர் நிறுத்தம்..!

இஸ்ரேல் ஹமாஸ் போர் 46 நாட்களை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், பிணைக்கைதிகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என இஸ்ரேல் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டினர். உலக நாடுகளினுடைய அழுத்தமும் இஸ்ரேலை சிக்கலில் தள்ளியது. இதனால் கத்தரின் மத்யஸ்த்தில் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது. ஹமாஸ் அமைப்பினரும் பிணைக்கைதிகளை விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இஸ்ரேலில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கும் இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியில் இருந்து நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது. அதன்பின் ஒவ்வொரு 10 பேருக்கும் ஒரு நாள் கூடுதலாக போர் நிறுத்தம் செய்யப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.

முதலில் பெண்கள் அவர்களின் குழந்தைகள் என்ற அடிப்படையில் விடுவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் விடுதலை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிணைக்கைதிகளுக்குப் பதிலாக இஸ்ரேல், தங்களது சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுதலை செய்ய இருக்கிறது.

Recent News