Friday, January 24, 2025
HomeLatest Newsகாதலை ஏற்க மறுத்ததால் தோழியிடம் ரூ.24 கோடி நஷ்டஈடு கேட்டு வாலிபர் வழக்கு!

காதலை ஏற்க மறுத்ததால் தோழியிடம் ரூ.24 கோடி நஷ்டஈடு கேட்டு வாலிபர் வழக்கு!

சிங்கப்பூரை சேர்ந்தவர் காவ்ஷிகன். இவரும் நோராடான் என்ற பெண்ணும் கடந்த 2016-ம் ஆண்டு நண்பர்களாக பழகினார்கள். இதற்கிடையே நோரா மீது காவ்ஷிகன் காதல் வயப்பட்டார்.

2020-ம் ஆண்டு நோராவிடம் தனது காதலை தெரிவித்தார். ஆனால் காதலை ஏற்க மறுத்த நோரா, இந்த உறவை நட்பாக மட்டுமே பார்ப்பதாக தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. தனது காதலை ஏற்க மறுத்து உணர்வு ரீதியாக கொடுமைப்படுத்துவதாக நோரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவ்ஷிகன் முடிவு செய்தார்.

பின்னர் இருவரும் டாக்டரிடம் ஆலோசனைக்கு செல்ல முடிவெடுத்ததால் சட்ட நடவடிக்கையை காவ்ஷிகன் கைவிட்டார்.

இருவரும் 1½ ஆண்டு மருத்துவ ஆலோசனையை தொடர்ந்து வந்தனர். ஆனால் காவ்ஷிகனிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

தன் காதலை ஏற்க வேண்டும் அல்லது தொழில், தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்ற முடியாத சேதாரத்தை நோரா சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் காவ்ஷிகனிடம் இருந்து நோரா விலக தொடங்கி இருந்தார். இது காவ்ஷிகனுக்கு மேலும் கஷ்டத்தை கொடுத்தது. இதையடுத்து நோரா மீது கோர்ட்டில் காவ்ஷிகன் இரண்டு வழக்குகளை தொடர்ந்தார்.

அதில் தன்னை மன அழுத்தங்களுக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கியதற்காகவும், என்னுடைய தொழில் வாழ்க்கையை சிதைத்தற்காகவும் 3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பீட்டில் ரூ.24 கோடி) இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு முந்தைய விசாரணை வருகிற 9-ந்தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News