Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஈழத்து அன்னையை நோக்கி நடைபெற்ற தமிழர் திருயாத்திரை!!!

ஈழத்து அன்னையை நோக்கி நடைபெற்ற தமிழர் திருயாத்திரை!!!

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் முன்னெடுக்கும் தமிழர் திருயாத்திரை சிறப்பாக நடைபெற்றுள்ளது.இந்த திருயாத்திரை ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாம் சனிக்கிழமை முன்னெடுக்கப்படும்.இந்த வகையில் தற்போது 26 வது வருட தமிழர் திருயாத்திரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மருதமடு அன்னை பெல்ஜியம் பெனு அன்னை பேராலயத்துக்கு ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்து 5000 க்கும் மேற்பட்ட மக்கள் வருகைதந்தனர்.இந்த சிறப்பு திருநாள் திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்.மிகவும் அற்புதம் நிறைந்த மருதமடு அன்னை ஈழத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு பெனு அன்னை பேராலய வளாகத்தில் இருப்பது மிகவும் சிறப்பம்சமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Recent News